உலகம் பேடித்தனமாய் வாய் மூடிக் கிடக்க, இந்தியப் பாதுகாப்போடு சிங்கள காடையர்கள் எம் உறவுகளைக் மொத்தமாகக் கொன்றழித்துவிட்டனர்.
யாருக்காக தமிழீழம்..? இனி எதற்காக தனி ஈழம்? யார் தலைமையில் தமிழீழம்?
இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதிலிருக்கிறதா திமுக தலைவர் அவர்களே…
30 ஆண்டு காலம்… ஆயிரக்கணக்கான மறவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை, ராஜீவ் காந்தி என்ற அரசியல்வாதி ஒருவரது மரணத்துக்காக நிர்மூலமாக்கிவிட்டீர்களே….. நியாயமா?
ஈழத்தில் எம் உறவுகள் அழியும் போது, வேதனைக் குரலில் நாடகமாடி, தந்திகளையும் கடிதங்களையும் டெல்லிக்கு அனுப்பி வந்த நீங்கள், இன்று மத்திய ஆட்சியில் மகனுக்கும் மகளுக்கும் பங்கு வாங்க, இந்த தள்ளாத வயதிலும், நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் தருணத்திலும் விமானம் பிடித்து டெல்லி பறக்கிறீர்களே… உலக மகா நடிகரய்யா நீர்…
கொஞ்ச நஞ்சமிருந்த சின்ன மரியாதையும் தூக்கி எறிந்துவிட்டுச் சொல்கிறோம்… பழிவாங்கப்பட்டு, குடும்பங்களையும் எம் இனக் காவலர்களையும் இழந்துவிட்டு கண்ணீருடன் கதறும் எம் உறவுகளின் சார்பில் நின்று உணர்வுள்ள தமிழனாய்ச் சொல்கிறோம்…
எதிரிக்குக் கூட மன்னிப்புண்டு… இனப் படுகொலைக்கு மௌன சாட்சியாய் இருந்த உமக்கு எந்தப் பிறவியிலும் மன்னிப்பே கிடையாது! உங்கள் மரணத்தின்போது சிந்த இந்த தமிழர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரும் மிச்சமிருக்காது!
all your articles wer fabulous nd interesting keep it up
ReplyDelete