Tuesday, August 14, 2012

குப்பனிடம் கற்றுகொள்ள வேண்டியது!!!


மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சக்கரை அலையில் கரிஅள்ளி கொட்டும்  பணியில் சேர்ந்த  இவர்,அப்பொழுது இவர் படித்திருந்தது கல்வி படிப்பு.இவருக்கு கிடைத்தது வேலையில் கடைநிலை ஊழியருக்கு மரியாதையை தான்.அலையில் கடைநிலை ஊழியர்களுடன் இவருக்கு நட்பு இருந்தது.அனல் பறக்கும் வேலையில் இருந்த இவர் ,மனதிலும் படிக்கவேண்டும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் அனல் போல் கொதித்து கொண்டு  இருந்தது.அதன் விளைவால் தொலைதுற கல்வி பயில முயற்சி எடுத்தார்.பி.காம்(B.COM) பயில தொடங்கினர்.இவருக்குள் இருந்த கூச்சம் இவரை மற்றவரிடம் ,தான் சக ஊழியரிடம் கூட இதை பகிர்ந்து கொள்ள வில்லை.கடும் வேலை நேரங்களின் இடையே பி.காம் முடித்தார்.இப்பொழுது இவர் ஒரு பட்டதாரி.ஆனால் அதன் பிறகும் கரி அள்ளும் வேலையை தொடர்ந்தார்.இன்னும் இவரது கல்வி தாகம் குறையவில்லை எம்.காம்(M.COM) தொலைதுற கல்வி பயில விண்ணப்பித்தார்,படிக்கவும் செய்தார்.தேர்வில் வெற்றி பெற்று பட்டமும் பெற்றார்.இன்னும் இவர் கரி அள்ளும் வேலையில் தான் இருக்கிறார்.இப்பொது இவர் முதுநிலை பட்டதாரி.இப்பொது இவர் அந்த அலையின் பொறுப்பு அதிகாரிக்கு கடிதம் எழுதி உயர்பதவிக்கு விண்ணப்பித்தார்,அவர் தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரை செய்கிறார்.சிறிது காலம் களைத்து இவருக்கு அந்த அலையிலே  கணக்காளர் அலுவலகத்தில் அதிகாரி பணி கிடைத்தது.இதை அறிந்த சக ஊழியர்கள் அச்சிரியமும் ,அருவெருப்பும் அடைந்தனர்.சில நாட்கள் அலை முழுவதும் இவரை பற்றித்தான் பேச்சு .ஆச்சரியம் அடைந்தது சக ஊழியர்கள்.அருவெருப்பும் அடைந்தவர்கள் மேல் ஜாதி ஊழியர்களும் ,இவருடன் பண்ணிசெய்ய போகும் அதிகாரிகளும்.அந்த அலுவலத்தின் பியூன் இதுவரை வாடா போடா என்று அழைத்தவன் இவர் அதிகாரி ஆனதும் அதிரிச்சி அடைந்தான்.ஆனால் இவர் அதிகாரி ஆன பின்பும்   வாடா போடா என்றே அலைகிறான்.அதிகரிகளும் அப்படியே நடந்து  கொண்டனர்.  முதல் முறையாக அந்த அலுவலகத்துக்கு அதிகாரியாக செல்லும் இவர்க்கு கணினி பயன்படுத்த தெரியாது.தனது மேல் உள்ள அதிகாரியிடம் உதவி கோரிஉள்ளார் .என்வேலை பார்பதற்கே எனக்கு நேரமில்லை ,உனக்கு சொல்லி தர முடியாது என்று பதில் கூறி இவரை உதாசீன படுத்திருக்கிறார்.ஆனால் இவர் அசரவில்லை.ஒரே வருடம் கணினியை கரைத்து குடித்தார் .எப்படி என்று தெரியவில்லை..இவர் கணினியை பற்றி புத்தகம் எழுதும் அளவுக்கு பயின்று விட்டார்.தமிழ் கணினி என்ற இதலில்  வன்பொருள் மென்பொருள் பற்றிய அனைத்தும் எழுதினர்..இதன் இடையே பட்டய கணக்காளர்(C.A) படிப்பை முடித்தார்.தலைமை கணக்காளர் பதவியை அடைந்துள்ளார்.இன்னும் அந்த அலையின் தலைமை பதவிக்கு அடுத்த ஒரு  சில வருடங்களில் பதவி உயர்வு பெறுகிறார்.இவரை இப்பொது அனைவரும் மரியாதை  மற்றும் முன்மாதிரி மனிதராக பார்க்கின்றனர்.  இவரை பற்றி கேட்டபொழுது ,மெய்சிலிர்கிறது.அமாம் ஒரு கரி அள்ளி போடும் தொழிலாளி அலையின் தலைமை பதவிக்கு உயருந்துள்ளர்.நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்று நினைத்திருந்தால் இவர் என்னும் கரி அள்ளி தான் போட்டு கொண்டு இருப்பர் .இவரின் தன்னமிக்கை நமக்கு பாடம் நடத்துகிறது.இவரின் உழைப்பு என்னை அண்ணாந்து பார்க்க வைக்கிறது.ஜாதிய அடையாளத்தையும் ,அதனால் ஏற்படும் தடையையும் தனது கல்வியினால் மாற்றி அமைத்துள்ளார்.இவரின் விடா முயற்சி வழியை பின்பற்றினால் உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்று நிருபணமாகும்.
இவரின் பெயர் குப்பன் தான்.இவர் அதை மரியாதைக்குரிய குப்பனாக மாற்றி உள்ளார் இவரின் உழைப்பால்.
இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் அமைந்துள்ள அரசு  சக்கரை அலையில் பணிபுரிகிறார்.

Wednesday, July 11, 2012

கழிப்பறைகள் இல்லாத இந்தியா!!! இந்தியாவின் மிகப்பெரிய அசிங்கம்


கழிப்பறைகள் இல்லாத இந்தியா!!!
இந்தியாவின் மிகப்பெரிய அசிங்கம் ...இது தான் இந்தியாவின் பெரிய பிரச்னை.
இந்தியாவில் மக்கள் தொகையில் 120 கோடியில் 50 % சதவித மக்களின் விடுகளில் கழிப்பறை இல்லை.(2011 census)
246.6 மில்லியன் குடும்பங்கள் 46.9 % பேர்கள் விட்டில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளது. 49.8% குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர் மீதமுள்ள 3.2% பொது கழிப்பறைகள் பயன்படுத்துகின்றனர்.
77 % சதவிதம் விடுகளில் ஜார்க்கண்ட்லும்
76.6 % சதவிதம் விடுகளில் ஒரிசாவிலும்
75.8 % சதவிதம் விடுகளில் பீகாரிலும்
நமது தமிழத்தில் 60 % சதவிதம் விடுகளில்
கழிப்பறைகள் இல்லை.

நமது கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம் , முன்றில் இரண்டு விடுகளில் கழிப்பறைகள் இல்லை.

பொது இடங்களையும் ,திறந்தவெளி இடங்களையும் நாம் கழிப்பறைகளாக பயன்படுத்துகிறோம்.இது நமது பண்பாட்டில் உரிபோயுள்ளது.
இதற்கு கரணம் போதுமான கழிப்பறைகள் இல்லாத காரணத்தால அல்லது திறந்தவெளி இடங்களை மக்கள் விரும்புவதால அல்லது இன்றும் மனித மலத்தை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலார்கள் இருக்கிறார்கள் என்ற மாமதையில் அதிக வர்க்கம் செய்யும் சதியா?

சுகந்திரத்துக்கு முன்பு காந்தி ராஜ்கோட் ,குஜராத் மாநிலத்தில் உள்ள கழிப்பிட வசதிகளை பார்வையிட வந்தார் .அப்போது அவருக்கு தெரிய வந்த உண்மை மேல்மட்ட மக்களுக்கு தான் கழிப்பறை வசதிகள்ுபவித்தனர் என்றும் தாழ்த்த பட்டவர்களுக்கு கழிப்பறை வசதி அனுமதிக்க படவில்லை என்று.
நிண்ட காலம் களித்து காந்தி அவரது சீடர்களை மக்களுக்கு அடிப்படை கழிப்பறை அவசியம் பற்றி மக்களிடம் பரப்புரை செய்ய சொன்னார் .அத்துடன் கழிப்பறை இல்லாதவருக்கு அதை அமைத்தும் தர சொன்னார்.

இந்தியாவின் இந்த அவமானம் தெளிவாக அதன் கலாச்சார மனப்பான்மையில் வேரூன்றி உள்ளது. மேலும் சுதந்திரத்திற்கு பிறகு அரை நூற்றாண்டு கடந்து விட்ட பிறகும் , பல இந்தியர்கள் திறந்த வெளியை கழிப்பறையாகவும் மற்றும் குப்பை கொட்டும் இடமாகவும் எந்த குற்றவுணர்வும் இன்றி பயன்படுத்துகின்றனர்.ஆனால் இவர்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க விரும்புகின்றனர் .அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது , மக்கள் பழியை ஏற்க வேண்டும்.

வசதியனர்வர்களும் ,மேத்தா படித்தவர்களும் தங்கள் நாயை ரோடில் தான் மலம் கழிக்க வைக்கின்றனர்.ஆனால் நாம் பழியை அரசாங்கத்தின் மீது துக்கி போட்டுவிட்டு ,எல்லாத்துக்கும் அரசாங்கம் தான் கரணம் கற்பிப்போம் .முதலில் நாம் திருந்த வேண்டும்.

மத்திய அரசு கழிப்பறைகள் கட்ட மானியங்களை வழங்குகிறது மற்றும் பொது சுகாதாரம் , தனிமனித சுகாதாரத்தை பற்றிய பிரச்சாரங்களையும் நடத்துகின்றது.

2003 இல், அரசாங்கம் திறந்தவெளி மலம் கழித்தல் முறையை அகற்ற முடியும் செய்து திட்டம் திட்டி திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்கும் கிராம சபைகளுக்கு விருது வழங்கவும் முடிவு செய்து அமல் படுத்தியது .

கேரளா வில் 87% கிராம சபைகள் விருது பெற்றுகின்றன.ஏழை மாநிலமான பீகாரில் உள்ள 2% சுகாதார நிலையை குழுக்களில் இலக்கை எட்டமுடிந்தது .


கழிப்பறை வசதிகள் பற்றிய சில புள்ளி விவரங்கள்:

40% பேர் மட்டுமே 2002 ல் சுகாதார வசதிகள் பெற்றிருந்தனர்.இது 2008-009 உள்ள 51% அதிகரித்தது.

பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் 60% வீடுகளில் கழிப்பறை இல்லாமல் இருகின்றனர் .

சீக்கிய மற்றும் கிரிஸ்துவர் குடும்பங்களின் 70% விடுகளில் கழிப்பறை இருக்கிறது
இந்துக்கள் குடும்பத்தில் - 45% விடுகளில் கழிப்பறை இருக்கிறது

இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகள் ஒரு கழிப்பறை பெற வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு , இந்த ஆண்டு இறுதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லை என்ற நிலையை அடைய உள்ளது.

ஹரியானா ,திறந்த மலம் கழித்தல் சமாளிக்க கழிப்பறைகள் கட்ட நல்ல கழிவு மேலாண்மை திட்டத்தை செய்யபடுத்தி, உள்ளூர் மக்கள் உதவிவுடன் வெற்றி பெற்று உள்ளது . ஹரியானாவில் கழிப்பறைகள் கட்ட ஏழை வீடுகளுக்கு உபயோகப்பொருட்கள் மணியன்களாக வழங்குகிறது.

எதை எதையோ ஓசி வழக்கும் தமிழக அரசு ஹரியானா மாநிலத்தை பின்பற்றி கழிவறை கட்ட மாணிய வில்லையில் பொருட்கள் வழங்கி சுகதரத்தை பேனா வேண்டும்

மக்களும் ,அரசாங்கமும் இணைத்து செயல்பட்டால் மட்டுமே இந்த அசிங்கத்தில் இருத்து இந்த தப்பிக்கும்.கழிவறைகள் தான் முக்கிய சுகாதார பிரச்னை.நோய் பரப்பும் இந்த சுகாதார பிரச்னை திர்க்கவிட்டால் ...பல புதிய நோய்களுக்கு வழிவக்கும்.

Source:
http://www.bbc.co.uk/news/world-asia-india-17377895