மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சக்கரை அலையில் கரிஅள்ளி கொட்டும் பணியில் சேர்ந்த இவர்,அப்பொழுது இவர் படித்திருந்தது கல்வி படிப்பு.இவருக்கு கிடைத்தது வேலையில் கடைநிலை ஊழியருக்கு மரியாதையை தான்.அலையில் கடைநிலை ஊழியர்களுடன் இவருக்கு நட்பு இருந்தது.அனல் பறக்கும் வேலையில் இருந்த இவர் ,மனதிலும் படிக்கவேண்டும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் அனல் போல் கொதித்து கொண்டு இருந்தது.அதன் விளைவால் தொலைதுற கல்வி பயில முயற்சி எடுத்தார்.பி.காம்(B.COM) பயில தொடங்கினர்.இவருக்குள் இருந்த கூச்சம் இவரை மற்றவரிடம் ,தான் சக ஊழியரிடம் கூட இதை பகிர்ந்து கொள்ள வில்லை.கடும் வேலை நேரங்களின் இடையே பி.காம் முடித்தார்.இப்பொழுது இவர் ஒரு பட்டதாரி.ஆனால் அதன் பிறகும் கரி அள்ளும் வேலையை தொடர்ந்தார்.இன்னும் இவரது கல்வி தாகம் குறையவில்லை எம்.காம்(M.COM) தொலைதுற கல்வி பயில விண்ணப்பித்தார்,படிக்கவும் செய்தார்.தேர்வில் வெற்றி பெற்று பட்டமும் பெற்றார்.இன்னும் இவர் கரி அள்ளும் வேலையில் தான் இருக்கிறார்.இப்பொது இவர் முதுநிலை பட்டதாரி.இப்பொது இவர் அந்த அலையின் பொறுப்பு அதிகாரிக்கு கடிதம் எழுதி உயர்பதவிக்கு விண்ணப்பித்தார்,அவர் தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரை செய்கிறார்.சிறிது காலம் களைத்து இவருக்கு அந்த அலையிலே கணக்காளர் அலுவலகத்தில் அதிகாரி பணி கிடைத்தது.இதை அறிந்த சக ஊழியர்கள் அச்சிரியமும் ,அருவெருப்பும் அடைந்தனர்.சில நாட்கள் அலை முழுவதும் இவரை பற்றித்தான் பேச்சு .ஆச்சரியம் அடைந்தது சக ஊழியர்கள்.அருவெருப்பும் அடைந்தவர்கள் மேல் ஜாதி ஊழியர்களும் ,இவருடன் பண்ணிசெய்ய போகும் அதிகாரிகளும்.அந்த அலுவலத்தின் பியூன் இதுவரை வாடா போடா என்று அழைத்தவன் இவர் அதிகாரி ஆனதும் அதிரிச்சி அடைந்தான்.ஆனால் இவர் அதிகாரி ஆன பின்பும் வாடா போடா என்றே அலைகிறான்.அதிகரிகளும் அப்படியே நடந்து கொண்டனர். முதல் முறையாக அந்த அலுவலகத்துக்கு அதிகாரியாக செல்லும் இவர்க்கு கணினி பயன்படுத்த தெரியாது.தனது மேல் உள்ள அதிகாரியிடம் உதவி கோரிஉள்ளார் .என்வேலை பார்பதற்கே எனக்கு நேரமில்லை ,உனக்கு சொல்லி தர முடியாது என்று பதில் கூறி இவரை உதாசீன படுத்திருக்கிறார்.ஆனால் இவர் அசரவில்லை.ஒரே வருடம் கணினியை கரைத்து குடித்தார் .எப்படி என்று தெரியவில்லை..இவர் கணினியை பற்றி புத்தகம் எழுதும் அளவுக்கு பயின்று விட்டார்.தமிழ் கணினி என்ற இதலில் வன்பொருள் மென்பொருள் பற்றிய அனைத்தும் எழுதினர்..இதன் இடையே பட்டய கணக்காளர்(C.A) படிப்பை முடித்தார்.தலைமை கணக்காளர் பதவியை அடைந்துள்ளார்.இன்னும் அந்த அலையின் தலைமை பதவிக்கு அடுத்த ஒரு சில வருடங்களில் பதவி உயர்வு பெறுகிறார்.இவரை இப்பொது அனைவரும் மரியாதை மற்றும் முன்மாதிரி மனிதராக பார்க்கின்றனர். இவரை பற்றி கேட்டபொழுது ,மெய்சிலிர்கிறது.அமாம் ஒரு கரி அள்ளி போடும் தொழிலாளி அலையின் தலைமை பதவிக்கு உயருந்துள்ளர்.நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்று நினைத்திருந்தால் இவர் என்னும் கரி அள்ளி தான் போட்டு கொண்டு இருப்பர் .இவரின் தன்னமிக்கை நமக்கு பாடம் நடத்துகிறது.இவரின் உழைப்பு என்னை அண்ணாந்து பார்க்க வைக்கிறது.ஜாதிய அடையாளத்தையும் ,அதனால் ஏற்படும் தடையையும் தனது கல்வியினால் மாற்றி அமைத்துள்ளார்.இவரின் விடா முயற்சி வழியை பின்பற்றினால் உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்று நிருபணமாகும்.
இவரின் பெயர் குப்பன் தான்.இவர் அதை மரியாதைக்குரிய குப்பனாக மாற்றி உள்ளார் இவரின் உழைப்பால்.
இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் அமைந்துள்ள அரசு சக்கரை அலையில் பணிபுரிகிறார்.
